“அது, பசியாயிருக்கிறவன் தான் புசிக்கிறதாகச் சொப்பனம் கண்டும்,
விழிக்கும்போது அவன் வெறுமையாயிருக்கிறதுபோலவும், தாகமாயிருக்கிறவன்,
தான் குடிக்கிறதாகச் சொப்பனம் கண்டும், விழிக்கும்போது அவன்
விடாய்த்துத் தவனத்தோடிருக்கிறதுபோலவும் சீயோன் மலைக்கு
விரோதமாக யுத்தம்பண்ணுகிற திரளான சகல ஜாதிகளும் இருக்கும்” (ஏசாயா 29:8).
நம்முடைய வாழ்க்கையில் சீயோன் மலைக்கு உகந்த வாழ்க்கையை நாம் வாழாமல்
இருப்போமானால், நாம் அதற்கு விரோதமாக யுத்தம் பண்ணுகிறவர்களாகவே
காணப்படுவோம். நம்முடைய வாழ்க்கையில் சீயோன் மலைக்கு போகும் படியான
பாதையில் நாம் ஓடிக்கொண்டிருக்கிறோமா? பரலோக ராஜ்யத்திற்கு ஏற்றக்
காரியங்களில் நம் சிந்தை காணப்படுகின்றதா? அவ்விதமாக இருக்குமானால், நம்
வாழ்க்கையில் கர்த்தர் தம் கிருபையை விளங்கப்பண்ணுவார்.
இந்த உலகத்தில் மனிதர்கள் பசியாய் இருக்கிறவன் தான் புசிப்பதாக கனவு
காணுவது போல, உலகத்தின் மாயைகளில் தங்களுடைய நிறைவைக் காணப்
பிரயாசப்படுகிறார்கள். விழிக்கும்போது வெறுமையாக இருப்பான். நாம் இந்த
உலகத்தில், உலகத்திற்கு ஏற்றக் காரியங்களைத் தெரிந்து கொள்ளும்பொழுது,
நம்முடைய முடிவு வெறுமையாகவே இருக்கும். நம் ஆத்துமா அதிபயங்கரத்திற்குள்
நுழையும். அப்பொழுது நம் நம்பிக்கை முற்றிலும் வீணாய்ப்போம். நித்திய
மரணத்தை சுதந்தரித்த ஒரு நபராய்க் காணப்படுவோம்.
“தரித்துநின்று திகையுங்கள்;” (ஏசாயா 29:9) என்று வேதம் சொல்லுகிறது.
அருமையான நண்பர்களே! இவ்விதமான நிலைக்கு நீங்கள் பங்காளிகளாக மாறாத
படிக்கு, தேவனுடைய எச்சரிப்புக்குப் பயப்படுங்கள். தேவன் பக்கமாக
திரும்புங்கள். தீமை செய்வதை விட்டு ஓயுங்கள். கர்த்தருக்குப் பிரியமான
வாழ்க்கையை வாழுங்கள். அப்பொழுது நித்திய ஜீவனைக் கண்டடைவீர்கள்.
No comments:
Post a Comment