Google Ads

Friday, 20 October 2017

விசுவாசிக்கு ஏன் போராட்டம்?

கடவுள் நம்பிக்கையில்லாத ஒரு நாத்திக நீதிபதியின் குதிரை வண்டியை கறுப்பர் இனைத்தைச் சேர்ந்த “சாம்போ” என்பவர் ஓட்டி வந்தான். அவன் அதிகமாக படித்தது கிடையாது. ஆனால் திடமான கிறிஸ்துவ விசுவாசியாக இருந்தார்! வண்டியில் செல்லும்போது அந்த நீதிபதி அந்த வண்டியோட்டியோடு பேசுவார். அப்போது சாம்போ, தனது விசுவாச வாழ்க்கையில் உண்டாகும் போராட்டாங்களைக் குறித்து சொல்வதுண்டு.

“பார்த்தாயா? கிறிஸ்தவர்களாகிய நீங்கள் எப்போதுமே சாத்தானுடன் போராடிக் கொண்டிருகின்றீர்கள். என்னைப்பார், எனக்கு எந்த போராட்டமும் இல்லை. துன்பமும் இல்லை. நம்பிக்கையில்லாத நாத்திகனாகிய நான் நன்றாகத்தானே இருக்கின்றேன்” என்று அடிக்கடி அந்த நீதிபதி சொல்வார். இவருக்கு சரியான பதிலை சொல்வதறியாமல் தவித்து வந்தார் சாம்போ. பதிலளிக்கும் சரியான தருணத்திற்காக அநேக நாட்களாக ஜெபித்து வந்தார்.

ஒரு நாள் நீதிபதி வேட்டையாடும் படியாக, சாம்போ-வை அழைத்துக்கொண்டு காட்டுக்குள் தனது குதிரை வண்டியில் சென்றார். சற்று தூரம் சென்றபோது, சில கொக்குகள் தலைக்கு மேலாக பறந்து சென்றன. தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்த நீதிபதி, கொக்குகளைப் பார்த்து சரியாக குறிவைத்து சுட்டார். ஒரு கொக்கு காயம்பட்டு விழுந்தது. மற்றொன்று செத்து விழுந்தது.

அதைக்கண்ட நீதிபதி சாம்போவிடம், “ உடனடியாக சென்று காயம்பட்ட கொக்கை பிடித்துக்கொண்ட
ு வா. இல்லாவிட்டால் அது தப்பி பறந்து விடும்” என்று கூறினார். கொக்கோடு திரும்பி வந்த சாம்போ “ஐயா, கிறிஸ்தவர்களுக்கு ஏன் அதிகமான போராட்டங்கள் வருகின்றது” என்பதை இப்பொழுது என்னால் சொல்ல முடியும் என்றார். பதிலை கேட்கும் படியாக ஆர்வமானார் அந்த நாத்திக நீதிபதி.

“காயம்பட்ட கொக்கை பிடிக்கும் படியாக காட்டிய அவசரத்தை, நீங்கள் ஏன் செத்த கொக்கிடம் காட்டவில்லை?” என்று கேட்டார் சாம்போ. “செத்து விழுந்த கொக்கு நமது கைகளிலிருந்து தப்பப்போவதில்லை. ஆனால் காயம்பட்ட கொக்கு நம்மிடமிருந்து தப்பியோடிவிடும். ஆகவே தான் முதலாவது அதைப்பிடிக்கும்படி துரிதப்படுத்தின
ேன்” என்றார் நீதிபதி.

அதற்கு சாம்போ, “ஐயா, கிறிஸ்தவர்களாகிய நாங்கள் அந்த அடிபட்ட கொக்கைப்போல இருக்கின்றோம். சாத்தானின் பிடியிலிருந்து தப்புவதற்காக போராடுகின்றோம். ஆனால் நீங்களோ செத்துப்போன கொக்கைப் போல இருக்கின்றீர்கள். சாத்தான் உங்களைப்பற்றி கவலைப்படுவதுமில்லை. ஆகவே உங்களுக்கு பாடுகளும் போராட்டங்களும் வருவதில்லை” என்றார்.

ஆம் பிரியமானவர்களே.. நித்திய ஜீவனை சுதந்தரிக்க ஓடுகின்ற மெய் கிறிஸ்தவர்களுக்கு பாடுகளும் போராட்டங்களும் உண்டு.

“நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்” (II தீமோ 4:7,8). ஆமேன். அல்லேலுயா.

No comments:

Post a Comment