Google Ads

Wednesday, 11 October 2017

குடும்ப பெண்களுக்கு மிக அவசியமான 10 ஆலோசனைகள்....


1) காலை ஜெபமே முழு நாளுக்குமான
     உங்கள் பெலன் சகோதரிகளே...

2) அந்தந்த நாளுக்கான வீட்டு காரியங்களை
     தினசரி பொருப்புகளை அன்றே செய்து
     முடித்துவிடுங்கள்....
(நாளை பார்த்துக்கொள்ளலாம் னு
   நினைக்காதீங்க)

3) நல்ல சில பெண்களோடு மட்டும்
     Friendship வைத்துக்கொள்ளுங்கள்...
     (எல்லோரோடும் பழகாதீர்கள்
                                 அது மிக ஆபத்தானது)

4) வேத வசனங்களால் மனதை எப்போதும்
     கூலாக வைத்துக்கொள்ளுங்கள்....
     (நீங்க டென்ஷனாக இருந்தால்
         முழு குடும்பமே மகிழ்ச்சியாக
                  இருக்க முடியாது)

5) பிற ஆண்களை பற்றி உங்கள்
     கணவனிடம் புகழ்ச்சியாக
     பேசாதீர்கள்.....
   (ஏன்  அப்படி சொல்ரீங்க என்று
                       என்னிடம் கேக்காதீங்க)

6) பண செலவு செய்யும் போது,
     "இது அவசியம்தானா???" என்று
     உங்களை நீங்களே ஒரு கேள்வி
     கேட்டுவிட்டு பின்பு செலவு செய்யுங்கள்
     (ஆரம்பர செலவு செய்யும்
      ஒரு பெண்ணால் குடும்பம்
      சீரழிந்து போகும்)

7) கணவரோடும் / பிள்ளைகளோடும்
     பேசும்போது,,,,
     உயிருள்ள வார்த்தைகளை,
     உற்சாகமூட்டும் வார்த்தைகளை,
     விசுவாச வார்த்தைகளை, 
     மட்டுமே பரிவோடு பேசுங்கள்....
(உங்கள் வார்த்தைகளால்
     உங்கள் குடும்பத்தை
                  கட்டவும் முடியும்
                      அழிக்கவும் முடியும்)

8) உங்கள் கணவர் வேலை பற்றியும்
     உங்கள் பிள்ளைகளின் கல்வி பற்றியும்
     அவர்களிடம் அன்புடன் விசாரியுங்கள்...

9) உங்கள் குடும்பத்தின் தனிப்பட்ட
     (Personal matters) தேவனை  தவிர
     வேறு யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்
 
10) பிரச்சனை இல்லாத குடும்பமே
       இந்த முழு உலகத்திலும் இல்லை
       நிச்சயம் உங்க குடும்பத்திலும் சில
       பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும்...
       அவையெல்லாவற்றையும்
       மனதில் நிரப்பி வைத்துக்கொண்டு
      முகத்தை உம்ம்ம்ம்ம்.... என்று
      வைத்துக்கொண்டிராமல்,
      தேவனை துதித்து முகத்தை
      மலர்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள்....

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

No comments:

Post a Comment