Google Ads

Monday, 9 October 2017

​"நம் ஜெபம் எவ்வாறு இருக்க வேண்டும்"


​​“…ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.”​​ - ரோமர்.12:12

பிரிட்டனில் பிறந்த ஜான் சார்லஸ் ரைல் என்பவர் ஒரு சிறந்த தேவ பக்தன்.  இவர் மிக அருமையான ஆவிக்குரிய நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார்.  அவற்றுள் “நீ ஜெபிக்கின்றாயா” என்ற தலைப்பிலுள்ள செய்தியின் சுருக்கத்தை இன்று காண்போம்.

👉 நான் ஆலய ஆராதனையில் வாரந்தோறும் பங்கு பெறுகின்றேனா இல்லையா என்பதை என் சபைப்போதகர் அறிவார்.  நா குடும்ப ஜெபம் செய்கிறேனா இல்லையா என்பதை என் வீட்டார் அறிவார்கள்.  ஆனால் நான் தனிமையில் ஜெபிக்கிறேனா இல்லையா என்பது எனக்கும் என் ஆண்டவருக்கும் மாத்திரமே தெரியும் காரியமாகும்.

👉 ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்காக சாப்பிடவோ, குடிக்கவோ, தூங்கவோ முடியாது.  அதுபோல எனக்காக மற்றொரு மனிதன் தேவனோடு உறவு கொள்ளமுடியாது.  ஜெபிக்காமல் தேவனை நான் எவ்வாறு அறிந்துகொள்வேன்? கட்டாயம் ஜெபிக்கவேண்டும்.

👉 ஜெபமின்றி வாசிக்கும் வேத வாசிப்பு, ஜெபமின்றி கேட்கும் பிரசங்கங்கள், ஜெபமின்றி ஒழுங்கு செய்யப்பட்ட திருமணங்கள், ஜெபமின்றி மேற்கொண்ட பிரயாணங்கள், ஜெபமின்றி தெரிந்துகொண்ட தோழமைகள்... போன்றவை ஒரு மனிதன் பின்மாற்றமடைவதற்கும், ஆவிக்குரிய வாழ்வில் பெரும் வீழ்ச்சியடைவதற்கும் அப்பட்டமான காரணங்களாகும்.

👉 “ஒரு மனிதன் ஜெபிக்கவில்லையெனில் அவன் ஒரு உண்மையான கிறிஸ்தவன் இல்லை.  அவன் தன் பாவங்களைக் குறித்து உணர்ச்சியற்றவன்.  அவனால் தேவனை நேசிக்க முடியாது.  தான் கிறிஸ்து இயேசுவுக்கு அன்புக்கடனாளி என்ற தியாகமான உணர்ச்சிப்பெருக்கு அவனிடம் இருக்கமுடியாது.  அவனால் பரிசுத்தத்தை வாஞ்சித்து கதறவும் முடியாது.”

👉 அநேக பின்மாற்றங்களுக்கான காரணம் யாது?  தனி ஜெப வாழ்வை அசட்டை பண்ணியதே பிரதான காரணமாகும்.

👉 ஜெபமின்றி இருப்பது தேவனின்றி இருப்பதாகும்.  அது கிருபையின்றி இருப்பதாகும்.  அது நம்பிக்கையின்றி இருப்பதாகும்.  நாம் ஜெபிக்கின்றோமா?

நாம் ஒரு உண்மை கிறிஸ்தவரானால், “நான் ஜெபிக்கின்றேனா” என்ற கேள்வியை எப்பொழுதும் கேட்டுக்கொள்ள வேண்டும்.

🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐

No comments:

Post a Comment