Google Ads

Sunday, 24 September 2017

பசி ருசி அறியாது

பசி ருசி அறியாது என்பது ஒரு பழமையான தமிழ் பழமொழி.  இது எப்படி வந்தது? என்று உங்களுக்கு தெரியுமா?  
பைபிளில் ஒரு வசனம் சொல்லுகிறது.  நீதிமொழிகள் 27 : 7https://dohnavurcsichurch.blogspot.com/2017/09/blog-post_25.html
“ திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்; பசியுள்ளவனுக்கோ கசப்பான பதார்த்தங்களும் தித்திப்பாயிருக்கும்”.
வயிறு நிறைய உணவு உண்டவன் அவருக்கு முன்பாக தேனை வைத்ததாலும் உதறித் தள்ளுவார்கள். (தேனை போல ருசியான, அருமையா உணவை அவர்களுக்கு கொடுத்தாலும் அவர்கள் அதை உதறித் தள்ளுவார் என்றும் ஆனால் அதே நேரத்தில் பசியான ஒருவனுக்கு அவன் முன்பாக கசப்பான அல்லது ருசியே இல்லாத ஆகாரம் அவர் முன் வைக்கப்பட்டாலும் அது அவருக்கு  தித்திப்பாயிருக்குமாம்.  இதைத்தான் என்னமோ பசி ருசி அறியாது என்று சொன்னார்களோ!! என்னவோ!!.பசி ருசி அறியாது

Monday, 18 September 2017

பட்சமாக உதவி செய்வோம்

பட்சமாக உதவி செய்வோம்

கிறிஸ்து தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். - (1 யோவான் 3: 16).

ஒரு வேதாகம கல்லூரியில் அங்கு படிக்கும் மாணவர்களுக்கு லூக்கா 10:25-37 வரையுள்ள நல்ல சமாரியனை குறித்த சம்பவத்தை நன்கு ஆராய்ந்து அதை குறித்த எல்லாவகையான படிப்பினையும் அறிந்து வர வேண்டும் என்று கூறப்பட்டது. எல்லாரும் அநேக ஸ்டடி பைபிள்களை தேடி அதை ஆராயத் தொடங்கினார்கள்.

ஆனால் அங்கு படித்த மூன்று மாணவர்கள் மாத்திரம் அந்த சம்பவத்தை படித்து அல்ல, நடைமுறையாக சிந்திக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். அதன்படி அந்த மூன்று பேரில் ஒரு மாணவர் தன்னை, சம்பவத்தில் வரும் குற்றுயிராக விடப்பட்ட மனிதனைப் போல, தன் உடைகளை கிழித்துக் கொண்டு, மண்ணை தன் மேல் போட்டுக் கொண்டு, இரத்த நிறத்தில் திரவத்தை தன்மேல் ஊற்றிக் கொண்டு தான் யாரென்று அடையாளம் தெரியாதவாறு தன்னை மாற்றி, அந்த கல்லூரியில் தரையில் கிடந்தார்.



மற்ற இரண்டு பேரும் மறைந்திருந்த என்ன நடக்கிறதென்று கவனிக்க ஆரம்பித்தனர். மாணவர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். யாரும் அந்த குற்றுயிராய் கிடந்த மாணவனின் பக்கம் திரும்பவில்லை, நிற்கவில்லை. சிலர் வந்து, 'ஏன் வேறு இடம் கிடைக்கவில்லையா? இந்த இடம்தானா கிடைத்தது?' என்று அவரை ஏசினார்கள். ஒருவரும் உதவி செய்யவில்லை.

அந்த மாணவர்கள் அநேக வேதாகமங்களை தேடி ஒரு நல்ல பதிலை கொண்டு வந்திருக்கலாம், ஆனால் நடைமுறையில் யாருமே வெற்றிப் பெறவில்லை! இரக்கத்தை குறித்து அறிந்திருப்பது வேறு, ஆனால் அதை கிரியையில் வெளிப்படுத்துவது வேறல்லவா!

'அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்' என்று வேதம் நமக்கு கூறுகிறது. மட்டுமல்ல, 'ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி?' (வசனம் 17) என்றும் கூறுகிறது.

பிரியமானவர்களே, நம்மோடு இருக்கிற ஒரு சகோதரனுக்கோ, சகோதரிக்கோ உதவி தேவையான நேரத்தில் நாம் உதவாமல் இருந்தால் நாம் எத்தனைதான் வேதாகமத்தை படித்திருந்தாலும், வேதம் சொல்லும் வார்த்தைகளின்படி மற்றவர்களுக்கு உதவவில்லை என்றால் என்ன பயன்?

'என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்' (வசனம்18) என்ற வார்த்தையின்படி நாம் பேசுகிறதினால் மாத்திரமல்ல, உண்மையாக கிரியையில் நாம் தேவனை நேசிக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும்படியாக மற்றவர்களுடைய தேவையில் உதவ வேண்டும். அவர்களுடைய குறைச்சலில் நம் இருதயத்தை அடைத்துக் கொள்ளக்கூடாது.

கிறிஸ்து பரலோகத்தில் செல்ல பிள்ளையாக இருந்தாலும் நமக்காக எல்லாவற்றையும் இழந்து, மனித அவதாரம் எடுத்து, தம் ஜீவனையே நமக்காக கொடுத்தாரே! அவருடைய வழியில் செல்லுகிறோம் என்று சொல்லுகிற நாம், சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம் என்ற வார்த்தையின்படி நம் ஜீவனை ஒருவேளை கொடுக்காவிட்டாலும் அவர்களது தேவையில், குறைவில், துன்பத்தில், துயரத்தில் நாம் பங்கெடுக்க வேண்டுமல்லவா?

வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம். ஆமென் அல்லேலூயா!

பசியுற்றோர்க்குப் பிணியாளிகட்குப்
பட்சமாக உதவி செய்வோம்
உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து
இயேசு கனிந்து திரிந்தனரே

நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
நீசரை நாம் உயர்த்திடுவோம்
பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்
நிஷ்டூரத்துக்குள், படுகுழிக்குள் விழுந்தனரே

தாசரே இத்தரணியை அன்பாய்
இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்

நேசமாய் இயேசுவைக் கூறுவோம் அவரைக் காண்பிப்போம்
மாவிருள் நீக்குவோம் வெளிச்சம் வீசுவோம்

ஜெபம்
எங்கள் அன்பின் நேச தகப்பனே நாங்கள் வெறும் வார்த்தையினால் மாத்திரமல்ல, செய்கையினாலும், கிரியைகளினாலும் மற்றவர்களிடம் அன்புகூரும்படி உணர்த்தும். கிறிஸ்து தமது ஜீவனையே எங்களுக்காக கொடுத்த தியாகத்தை நினைத்து, நாங்களும் சகோதர சகோதரிகளுக்கு அன்புடன் உதவிகள் செய்ய கற்றுத்தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Saturday, 16 September 2017

கர்த்தர் செய்ய நினைத்தது தடைபடாது

கர்த்தர் செய்ய நினைத்தது தடைபடாது
                                                                                                                                                                                                                                            தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன் (யோபு 42:2).என்ன அருமையான வேதவசனம். Our God is in control என்பதை நிரூபிக்கும் வகையில் தினம் தினம் ஆயிரம் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.நாம் விசுவாசத்தில் உறுதிபெற இங்கே அவற்றை அடிக்கடி கூற நாம் விழைகின்றோம். நேற்றைய தினம் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட தினத்தின் 10 ஆவது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. இந்த தினத்தில் நாடு முழுவதுமிருந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் Ground Zero எனப்படும் அந்த குறிப்பிட்ட இடத்துக்கு வந்து தாங்கள் இழந்த தங்களுக்கு பிரியமானவர்களை நினைகூர்ந்தார்கள்.ஆகிலும் இங்கு எந்த விதமான ஆன்மீக சம்பந்தமான காரியங்களும் பிரயர்களும் நடக்கக்கூடாது என்பதில் மேயர் புளூம்பெர்க் என்பவர் மிகவும் கண்டிப்பாக இருந்தார்.எத்தனையோ வேண்டுகோள்களும் விண்ணப்பங்களும் பொதுமக்கள் விடுத்தும் கூட ”கூடவே கூடாது”வென சகலருக்கும் எச்சரிக்கையும் விடுத்திருந்தார். இதனால் அங்கு நடைபெற்ற விசேச நிகழ்ச்சியில் பங்குபெற எந்த ஒரு கிறிஸ்தவ ஊழியருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. மக்களின் ஆறுதலுக்காக நாலுவார்த்தை பேசவோ ஜெபிக்கவோ யாருமே அங்கு இல்லை.ஆனால் கர்த்தரோ இன்னொரு வகையில் தன் நாமத்தை அங்கே பிரஸ்தாபப்படுத்தினார்.அதை நியூயார்க் நகர மேயரோ அல்லது நியூயார்க் மாகாண கவர்னரோ தடைசெய்ய இயலவில்லை. ஏனென்றால் அதை செய்தது சாட்சாத் அமெரிக்க அதிபரே ஆவார்.யார் தடை செய்யக் கூடும்.


அமெரிக்க அதிபர் ஒபாமா மேடையேறி வழக்கமான தனது உரையை நிகழ்த்தாமல் வேதாகமத்தில் சங்கீதம் 46-ஐ எடுத்து வாசிக்கத்தொடங்கினார். ”தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும், அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம்.” இவ்வாறாக வாசிக்க தொடங்கி முழு சங்கீதத்தையும் வாசித்து முடித்தார். ”யாக்கோபின் தேவன்” அங்கு அமெரிக்க அதிபராலேயே மகிமைப்படுத்தப்பட்டார். ஜனங்கள் இவ்வசனங்களை கேட்டு ஆறுதலும் தேறுதலும் அடைந்தார்கள்.கர்த்தருக்கே மகிமை. “Amazing Grace” பாடல் மூன்று இடங்களிலுமே பாடப்பட்டது.முன்னாள் நியூயார்க் மேயர் ரூடி ஜூலியானி பிரசங்கியின் புத்தகம் மூன்றாம் அதிகாரத்திலிருந்து சில வசனங்களை வாசித்து பின் “நாம் இழந்த ஒவ்வொரு ஆத்துமாக்களையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. அவர்களை நாம் பரலோகத்தில் மீண்டும் சந்திக்க உதவுவாராக.நம் தேசத்தை கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக." என உரையாற்றினார். கர்த்தருக்கு விரோதமாக பேசிய எழும்பிய சக்திகள் அங்கே முடக்கப்பட்டது. கர்த்தரே வெற்றி சிறந்தார். அவர் செய்ய நினைத்தது ஒருபோதும் தடைபடாது அன்றோ?

மேலே நாம் சொன்ன நியூயார்க் நகர மேயர் புளூம்பர்க் ஒரு யூதராவார்.அவரும் மேடையில் பேசினார்.அவர் பேச மேற்கோள் தேடியது பைபிளில் அல்ல. சேக்ஸ்பியரில்.அந்தோ பரிதாபம்.

Tuesday, 12 September 2017

வாக்குத்தத்தங்களை எப்படி தியானிக்க வேண்டும்?


ஆண்டவராகிய இயேசு வாக்குத்தத் தங்களின் தேவன். வாக்கு மாறாதவர்! வாக்கை நிறைவேற்றுகிறார்.
இன்று ஒரு வாக்குத்தம் கொடுத்து இருக்கிறார்.
,.....கர்த்தர் உங்கள் முன்னே போவார் ஏசாயா 52:12.
ஆம் இயேசு உங்கள் முன்னே போவேன் என்று சொல்லுகிறார்.
கோணலானாவைகளை செவ்வையக்க
தடைகளை நீக்கி, காரியங்களை வாய்க்க பண்ண, தினமும் வழி நடத்த, தினமும் கர்த்தர் உங்கள் முன்னே போவார்.
"
வாக்குத்தத்தம் எல்லாம் சந்தோசம் தான்.

ஆனால் வாக்குத்தத்தம் நிறைவேறவில்லையே! வாக்குத்தத்தம் நிறைவேறுமா? இந்த வாக்குத்தத்ததின் ஆசீவாதங்கள் எனக்கு நிறைவேறுமா?
மற்றவர்களுக்கு நடக்கிறது எனக்கு மட்டும் நடப்பதில்லையே ! வாக்குத்தத்த வசனத்தை என் வேதாகமத்திலேயே வைத்து இருக்கிறேன், தினமும் வாக்குத்தத்த வசனத்தை வாசிக்கிறேன், எனினும் ஒன்றுமே நடக்கவில்லையே!
                 
என்று இப்படி எல்லாம் யோசித்து கலங்கிக் கொண்டு இருக்கிறீர்களா? வாக்குத்தத்த வசனத்தை என் வேதாகமத்திலேயே வைத்து கொண்டாலோ, வாக்குத்தத்த
வசன காலண்டரை வீட்டில் தொங்க விடுவதாலோ ஆசிர்வாதம் உண்டாகாது! அற்புதம் நடக்காது!
அப்படியானால் என்ன செய்ய வேண்டும்,
முதலில் இந்த வாக்குத்தம் எனக்குரியது! கர்த்தர் எனக்குத்தான் இந்த வாக்குத்தத்ததைத் தந்துருக்கிறார்" என்று விசுவாசியுங்கள். "எனக்காகவே கர்த்தர் இந்த வாக்கைத் தந்துருக்கிறார் என்று விசுவாசிக்க வேண்டும்.
"கர்த்தர் எனக்கு கொடுத்த வாக்குபடி எனக்கு முன்னே செல்வார் என்று விசுவாசிக்க வேண்டும். தடைகளையெல்லாம் நீக்கி கோணலானவைகளை செம்மையாக்குவர், காரியங்களை வாய்க்க பண்ணுவார். என்று முழு இதயத்தோடும் விசுவாசிக்க வேண்டும்.
நீங்கள் விசுவாசிக்கவிட்டால் வாக்குத்தத்தம் பலிக்காது. விசுவாசிக்கும் போது தான் வாக்குத்தத்ததின் ஆசிர்வாதம் உங்களுக்கு உண்டாகும்.
வேத வசனத்தின் படி நடக்க கற்றுக் கொள்ளுங்கள்.
              


History of Dohnavur (வரலாறு)

1848-ல் டோனாவூரில்  உள்ள கிறிஸ்து  தேவாலயம் கட்டப்பட்டது. ரேனியஸ் ஐயர் உதவியுடன் எமி கார்மிகேல் மற்றும் தாமஸ் வாக்கர் போன்ற பெரிய மிஷனரிகள் இந்த கிறித்தவ கிராமத்தை தங்கள் தெய்வீக சேவையாக உருவாக்கினர்.
இந்த கிராமத்தில் அன்றைய காலத்திலேயே
1. மருத்துவமனை
2. ஒரு அனாதை இல்லம் மற்றும் தபால் சேவைகள் 18 ம் நூற்றாண்டில் இருந்தன
. இந்த கிராமத்தை உருவாக்க ஜேர்மன் கவுண்ட் டோஹன்னா ஒரு பெரிய தொகையை நன்கொடையாக அளித்தது. வால்டர் ஹொரி செக் என்ற பள்ளியைத் துவங்கினார். இப்போது அந்த பள்ளி சி.எஸ்.ஐ. திருநெல்வேலி மறைமாவட்டத்தால் நடத்தப்படுகிறது.
                                                    தாமஸ் உவாக்கர்  


எமி  கார்மிக்கேல் 
 டோனாவூர் என்ற  கிராமம் இந்தியாவின் தெற்குப் பகுதிக்கு அருகில் அழகாக அமைந்துள்ளது .  இந்த கிராமத்துக்கு  1901 ஆம் ஆண்டில், மில்ஸில், கோ டவுனில் மிஸ் ஆமி கார்மிகேல், குழந்தைகளின் தேவைகளை மீட்கத் தொடங்கியது. காலப்போக்கில் அவள் ஒரு பெரிய கிறிஸ்தவ சமுதாயத்தை உருவாக்கினாள். 1951 ஆம் ஆண்டில் அயர்லாந்திற்குத் திரும்பாமல், அவரது வாழ்நாள் முழுவதும் டோனாவூரில் இருந்தார்.



சமூகத்தில் வளர்க்கப்பட்டவர்களால் இப்போது தலைமையேற்றுக் கொண்ட இந்த குடும்பம் இன்றும் தொடர்கிறது. ஒரு குடும்பம் மற்றும் குடும்பத்தினர் தார்மீக மற்றும் / அல்லது உடல் ஆபத்தில் உள்ள குழந்தைகளுக்கு தங்களைக் கவனித்துக் கொள்ள யாரும் இல்லாதவர்கள். அத்தகைய குழந்தைகளுக்கு முழு பொறுப்பும் எடுக்கப்படுகிறது. பெல்லோஷிப்பில் வளர்ந்த பெண்களால் ஒரு மருத்துவமனை நடத்தப்பட்டு, மிகவும்சிறப்பாக  பணியாற்றி வருகிறது